/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை ஆய்வாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
/
இளநிலை ஆய்வாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
இளநிலை ஆய்வாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
இளநிலை ஆய்வாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
ADDED : டிச 19, 2024 05:55 AM
புதுச்சேரி: கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் பணிக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் பயன்படுத்தப்பட்ட வினாத்தாள், இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தேவையான அடிப்படை அறிவை சோதிக்கவில்லை.
கூட்டுறவுத் துறையின் இளநிலை ஆய்வாளர் மற்றும் தணிக்கையாளர் பணிக்கு தணிக்கை மற்றும் கணக்கியல் பற்றிய புலன் மற்றும் நடைமுறை பற்றிய விபரம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால், அரசு நடத்திய போட்டித் தேர்வில், கணக்கியல் குறித்த சில கேள்விகள் மட்டுமே இருந்தன. தணிக்கை பாடத்தில் ஒரு கேள்வியும் இல்லை. பெரும்பான்மையான கேள்விகள் பொது ஆங்கிலம், திறன், பொது அறிவு மற்றும் நடப்பு விவகார கேள்விகளே உள்ளது. தணிக்கை பாடத்தில் சோதனை செய்யப்படாதவர்கள் எப்படி தணிக்கையாளர்களாக செயல்பட முடியும்.
எனவே அரசு, தவறை சரி செய்ய வேண்டும். முடிவை நிறுத்தி வைத்து, சரியான வெயிட்டேஜுடன் மற்றொரு தேர்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

