/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
/
அரசு வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
அரசு வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
அரசு வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 01:29 AM
புதுச்சேரி : அரசு வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில், வழங்கப்பட்ட இடங்களை வாங்கி அந்த இடத்தில் வீடு கட்டி மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசு சார்பில், செய்யப்பட்டுள்ளன. நகராட்சி சார்பில், வீட்டு வரி கூட வசூலிக்கப்படுகிறது.ஆனால், அவர்கள் பெயரிலேயே பட்டா அல்லது பத்திரம் மாற்றி கொடுக்காததால், அச்ச உணர்விலேயே வாழ்ந்து வருகின்றனர்.எனவே, அரசு துறைகள் வழங்கிய பட்டா இடங்களை வரைமுறைப்படுத்திட முதல்வர்,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.