ADDED : ஆக 21, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சர் நமச்சிவாயம், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கூனிச்சம்பட்டு காலனி பகுதியில் நடந்து வரும் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் கைக்கிலன் குட்டை பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
அப்போது, கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு ஆணையர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனிருந்தனர்

