/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பார்சல் அலுவலகம் ஆம்னி பஸ்களில் சோதனை
/
தனியார் பார்சல் அலுவலகம் ஆம்னி பஸ்களில் சோதனை
ADDED : மார் 19, 2024 05:28 AM

புதுச்சேரி: தனியார் பார்சல் அலுவலகம் மற்றும் ஆம்னி பஸ்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கஞ்சா வரும் வழிகளை கண்டறிந்து தடுக்க வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், புதுச்சேரி வரும் பார்சல்களில் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் தலைமையிலான போலீசார் போதை பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் பைரவா துணையுடன், நுாறடிச்சாலையில் உள்ள தனியார் பார்சல் மையத்தில் ரெட்டியார்பாளையம் போலீசாருடன் சோதனையில் ஈடுப்பட்டனர். அங்கு கஞ்சா ஏதும் கிடைக்கவில்லை.
இ.சி.ஆரில் சிவாஜி சிலை அருகே புதுச்சேரி நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

