/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்
/
பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 19, 2025 05:45 AM
புதுச்சேரி : பள்ளியில், புகார் பெட்டிக்கு பதில், தொலைபேசியை வைக்க ஆம் ஆத்மி கட்சி, அறிவுறுத்தியுள்ளது.
அரியாங்குப்பம் ஆம் ஆத்மி நிர்வாகி, சித்ரா அறிக்கை;
தவளக்குப்பத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மழலையர் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படுவது அவர்களுக்கு உதவும் என தெரியவில்லை.
மழலையர்கள், புகார்களை எழுதுவது என்பது எந்த விதத்தில் சாத்தியம். உடல், மன ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாகும் குழந்தைகள் சுலபமாக கையாளும் வகையில் பள்ளியில் தொலைபேசியை வைப்பது சிறந்ததாக இருக்கும். பள்ளியில் வைக்கப்படும் தொலைபேசி என்பது, நேரடியாக சைல்டு லைனோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

