/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2025 02:22 AM
புதுச்சேரி: சமூக பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில், உரிமை யாளர்கள், தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் என, இ.எஸ்.ஐ., மண்டல துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல அலுவலக துணை இயக்குநர் கருப்பசாமி செய்திக்குறிப்பு:
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில், 196வது, இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் கூட்டத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், முதலாளிகள், ஊழியர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. தொழிலாளர், அரசு காப்பீட்டு கழகத்தால், அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள், ஊழியர்கள் பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டமாகும்.
இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ் சமுக பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் கடந்த 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதில், உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை நிறுவனங்கள் அதில், பணிபுரியும் ஊழியர்கள் குறித்து விபரங்களை இ.எஸ்.ஐ. இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மாவட்டங்களின் தொழில் உரிமையாளர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
மேலும், www.esic.gov.in. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல அலுவலக 0413-2357642 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.