/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிவாரணம் கேட்பு படிவங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
/
நிவாரணம் கேட்பு படிவங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
நிவாரணம் கேட்பு படிவங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
நிவாரணம் கேட்பு படிவங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 20, 2024 04:11 AM
புதுச்சேரி; நிவாரணம் கேட்பு விண்ணப்ப படிவங்களை பெற்று விவசாயிகள் சமர்ப்பிக்கலாம் என, கூடுதல் வேளாண் இயக்குநர் தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு:
நடப்பு வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கு, பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே நடப்பு பருவத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகளின் தரவுகள் கணக்கெடுக்கப்பட்டு, அத்தரவுகள் அடங்கிய விண்ணப்ப படிவங்கள் அந்தந்த உழவர் உதவியங்களில் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை விவசாயிகள் பெற்று, சரி பார்த்து ஒப்புகையுடன் அந்தந்த உழவர் உதவியங்களில் வரும் 27ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வரும் 24ம் தேதி வரை நடக்கும் கிராமங்களை நோக்கி நிர்வாகம் என்ற தேசிய அளவிலான பிரசார நிகழ்வில் வேளாண் துறை சார்பில் நடக்கும் முகாம்களிலும் கலந்து கொண்டு நிவாரண கேட்பு விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.
நாளை 21ம் தேதி பாகூர், 23ம் தேதி திருக்கனுார், 24ம் தேதி கரிக்கலாம்பாக்கத்திலும் இம்முகாம் நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.