sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எடை இயந்திரங்களை சரி பார்த்து சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

/

எடை இயந்திரங்களை சரி பார்த்து சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

எடை இயந்திரங்களை சரி பார்த்து சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

எடை இயந்திரங்களை சரி பார்த்து சான்றிதழ் பெற அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 26, 2025 08:16 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எடை மற்றும் அளவை இயந்திரங்களை சரிபார்த்து உரிய சான்றிதழ் பெற வேண்டும் என, எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு;

புதுச்சேரியில் இயங்கும் தொழில் நிறுவனங்கள், பல்பொருள் சிறப்பு அங்காடிகள், பேக்கரி கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகளில், பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவை இயந்திரங்களை, புதுச்சேரி சட்டமுறை எடையளவு (அமலாக்க) விதிகள், 2011ன் கீழ் சரிபார்த்து, ஆண்டிற்கு ஒருமுறை அரசாங்க முத்திரையிட்டு சான்றிதழ் பெறவேண்டும்.

பலர் எடை இயந்திரங்களுக்கு முறையான சான்றிதழ் பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது. இது சட்டமுறை எடையளவை சட்டம், 2009ன் பிரிவு 33ன் கீழ் அபராதம் விதிப்பதற்குரிய குற்றமாகும். இது தொடர்பாக, ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வரும் 30ம் தேதி கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூர், 31ம் தேதி நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், மடுகரை, ஆகஸ்ட் 1ம் தேதி மதகடிப்பட்டு, திருக்கனுார், 4ம் தேதி திருபுவனை, திருவாண்டார்கோவில், அரியூர், பங்கூர், 5ம் தேதி பத்துக்கண்ணு, சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், 6ம் தேதி லிங்காரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம் ஆய்வுகள் நடக்கிறது.

இதேபோல், 7, 8, 19, 20 ஆகிய தேதியில் வழுதாவூர் சாலை, 11, 12, 21, 22 ஆகிய தேதிகளில் காமராஜர் சாலை, 13ம் தேதி கருவடிக்குப்பம் முதல் ராஜிவ்காந்தி சதுக்கம் வரையிலும், 14ம் தேதி லாஸ்பேட்டை, 18 ம் தேதி கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரையிலும், 19ம் தேதி எம்.ஜி. ரோடு முத்தியால்பேட்டை முதல் அஜந்தா சிக்னல் வரையிலும், 20ம் தேதி முதலியார்பேட்டை முதல் முருங்கப்பாக்கம் வரை, 21ம் தேதி முருங்கப்பாக்கம் முதல் வில்லியனுார் வரை, 22ம் தேதி கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம், பிள்ளையார்குப்பம் வரை, 25ம் தேதி வில்லியனுாரில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

ஆய்வின்போது, சான்றிதழ் பெறாமல் அல்லது புதுப்பிக்கப்படாமல் எடை மற்றும் அளவை இயந்திரங்கள் உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும். அல்லது எடை இயந்திரங்கள் கைப்பற்றப்படும்.

எனவே வியாபாரிகள் தங்களது எடை மற்றும் அளவை இயந்திரங்களை சரிபார்த்து உரிய சான்றிதழ் பெற்று பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியிலுள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள் 0413 -2253462, 2252493 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us