/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தல்
/
மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தல்
மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தல்
மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தல்
ADDED : டிச 31, 2024 06:12 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பொதுமக்கள் கொடுக்கும், புகார்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.
வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலை வைத்தார்.
மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி., அறிவுறுத்தினார்.
காரைக்காலில், குறைதீர்வு கூட்டம், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையில் நடந்தது. ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., இஷா, தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., பக்தவச்சலம், டி.நகர்., போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., வீரவல்லபன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
போக்குவரத்து வடக்கு மற்றும் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்களில்,எஸ்.பி.,க்கள் பிரவீன்குமார் திரிபாதி, செல்வம், தெற்கு மற்றும் மேற்கு பகுதி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., மோகன் குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாகியில்,எஸ்.பி., சரவணன், ஏனாமில், எஸ்.பி., ராஜசேகரன் ஆகியோர் தலைமையில், மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
பல்வேறு இடங்களில் நடந்த குறைவு தீர்வு கூட்டத்தில், 113 புகார்கள் பெறப்பட்டு, 86 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.