தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல்

காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல்

காலி மனைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல்


UPDATED : நவ 29, 2026 05:54 PM

ADDED : நவ 29, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 05:54 PM ADDED : நவ 29, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: காலி மனைகளை சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காலி மனைகள் அதன் உரிமையாளர்களால் முறையாக பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி கிடைக்கின்றன. மேலும் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாக மாறி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் காதார சீர்கேடு உருவாகும் நிலை உள்ளது.

தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி மனண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை மனை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். புதர்களை அகற்றி மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் உரிமையாளர்கள் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்கும் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us