ADDED : நவ 29, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் தேவவேந்திரன்,52; பெயிண்டர்.
இவர், கடந்த சில ஆண்டுகளாக மது போதைக்கு ஆளாகி உள்ளார். கடந்த 25ம் தேதி, மாலை 5:00 மணியளவில் வீட்டில் பின் மண்டடை வீங்கிய நிலையில், மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று (நவ.,28) சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில், முத்தியாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
