/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர்களுக்கான காப்பீட்டு பதிவு முகாம்
/
தொழிலாளர்களுக்கான காப்பீட்டு பதிவு முகாம்
ADDED : மே 02, 2025 04:53 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், துாய்மை தொழிலாளர்களுக்கு, தபால் துறை மூலம் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு பதிவு முகாமை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்து, காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
மே 1 உழைப்பாளர்கள் தினத்தையொட்டி, உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், மினி லோடு ஓட்டுனர்கள், துாய்மை தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் தனது சொந்த செலவில் தபால் துறை மூலம் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு செய்யும் முகாமை ஏற்பாடு செய்திருந்தார்.
முகாமை, அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்து, பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டு அட்டையை வழங்கினார். இதில், பாவாணன் நகர் சரவணன், விஜயபாரதி, மது, உஷா, கோமதி, பிரகாஷ், நடராஜ், முருகன், ஆறுமுகம், கனகலிங்கம் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.