நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்
ADDED : அக் 22, 2026 05:29 PM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகம் சார்பில் நிலங்களை காப்போம் ‘கேத் பச்சாவோ அபியான்’ மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் சந்தை புதுக்குப்பத்தில் இன்று (அக்.,22) நடந்தது.
வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரவி கலந்து கொண்டு மண் வளம் மற்றும் நிலங்களை காப்போம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மண்ணியல் நிபுணர் பிரபு, நெல் மற்றும் நிலகடலை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் ஏழுமலை, சக்திவேல், சிவனாந்தம் ஆகியோர் செய்திருந்தனர். தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார். இதில், சந்தை புதுக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
