ADDED : அக் 22, 2026 05:40 PM
புதுச்சேரி: திருக்கனுார், புதுநகர், 3வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் திருமுருகன், 24; பி.எஸ்சி., நர்சிங் படித்து விட்டு, வெளிநாட்டில் நர்சிங் வேலைக்கு செல்ல, கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது மனைவி சங்கவியின் கர்ப்பம் கலைந்ததால், மனமுடைந்த திருமுருகன் அன்றிருந்த வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். திருமுருகன் நேற்று (அக்.,21) மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதையடுத்து, இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தந்தை ஏழுமலை, திருமுருகனை அழைத்தபோது, அறையின் கதவு திறக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பேனில் திருமுருகன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஏழுமலை அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
