/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
/
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
ADDED : பிப் 28, 2024 11:04 PM

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் மரவள்ளி, தென்னை மற்றும் வாழை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் சோம்பட்டில் நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் நிபுணர் விஜயகுமார், சங்கமித்ரா நர்சரி உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பூஜ்ஜிய குளிரூட்டு அறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட சோம்பட்டு, செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

