தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களே தீர்வு

 மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களே தீர்வு

 மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களே தீர்வு


ADDED : மார் 10, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களே தீர்வு என சென்னை பிரஸ்ட் சென்டரின் மார்பக புற்று நோய்க்கான முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு, நோயறிதலை கண்டறிய பல்வேறு இடங்களில் தனித்தனியே பரிசோதனை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களே இதற்கு காரணம்.

டாக்டரின் நேரடிப் பரிசோதனை, ஸ்கேனிங் மற்றும் திசுப் பரிசோதனை (பயாப்ஸி) ஆகிய மூன்று பரிசோதனைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த மையங்கள் மூலமே துல்லியமான மற்றும் விரைவான நோயறிதலைச் சாத்தியமாக்க முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரயில் 12 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இது உறுதியாகியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் பகுதி மக்கள் இலவச மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு 91 99400 49034 என்ற பிரத்யேக கட்டணமில்லா உதவி எண்ணை சென்னை பிரஸ்ட் சென்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், மார்ச் மாதம் முழுவதும் அதிநவீன '3டி டிஜிட்டல் டோமோகிராபி' பரிசோதனை மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இப்பரிசோதனை மூலம் அடர்த்தியான மார்பகத் திசுக்கள் உள்ள பெண்களுக்கும், மார்பகத்திலுள்ள சிறிய கட்டிகளையும் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

புதுச்சேரி மொத்த மக்கள் தொகையி்ல 69 சதவீதத்தினர் நகரப்பகுதியில் வசிக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றங்களாலும், தாமதித்து கருத்தரிப்பதாலும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு நகர்ப்புற மக்களிடையே அதிகமாக உள்ளது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேம்பட்ட வசதிகள் இல்லாததால், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

நீண்ட தூரப் பயணம் மற்றும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ஒரு ஒருங்கிணைந்த மையமான சென்னை பிரஸ்ட் சென்டர், பரிசோதனை முடிவுகளை 72 மணி நேரத்திற்குள் வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்படுவதை உறுதி செய்கிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us