/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டி பரிசளிப்பு
/
பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டி பரிசளிப்பு
பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டி பரிசளிப்பு
பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 28, 2025 04:40 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.
உப்பளம், ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில், பள்ளி கல்வித் துறையின் சமக்ரசிக் ஷா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு இடையேயான இசைக்குழு போட்டி நடந்தது.
இப்போட்டியை ஆயுதப்படை எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் துவக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்கள், 2 மாணவியர் குழுக்கள் கலந்து கொண்டன.
போட்டியில், ஆண்கள் பிரிவில் அமலோற்பவம் பள்ளியும், பெண்கள் பிரிவில் குளூனி பள்ளியும் முதலிடம் பிடித்தன.தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா தலைமை தாங்கினார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இசைக்குழுவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகள் வழங்கினார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நோடல் அதிகாரி ஆரோக்யராஜ் செய்திருந்தார்.

