/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான நிலைய விரிவாக்கத்திற்கு வட்டியில்லாமல்... கடன் கொடுங்க!மூலதன முதலீட்டு திட்டத்தில் கேட்கிறது புதுச்சேரி
/
விமான நிலைய விரிவாக்கத்திற்கு வட்டியில்லாமல்... கடன் கொடுங்க!மூலதன முதலீட்டு திட்டத்தில் கேட்கிறது புதுச்சேரி
விமான நிலைய விரிவாக்கத்திற்கு வட்டியில்லாமல்... கடன் கொடுங்க!மூலதன முதலீட்டு திட்டத்தில் கேட்கிறது புதுச்சேரி
விமான நிலைய விரிவாக்கத்திற்கு வட்டியில்லாமல்... கடன் கொடுங்க!மூலதன முதலீட்டு திட்டத்தில் கேட்கிறது புதுச்சேரி
ADDED : ஜன 20, 2026 04:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் குறித்த பட்டியலை மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரி விமான நிலையம் தற்போது சிறிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் 1,750 மீட்டர் நீள ஓடுதளம் மட்டுமே கொண்டுள்ளது. இங்கு பன்னாட்டு விமானங்கள் வந்து இறங்கும் வகையில் 3,400 மீட்டர் நீளத்திற்கு ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு மொத்தம் 402 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 185 ஏக்கர் புதுச்சேரியிலும், 217 ஏக்கர் தமிழ்நாட்டிலும் அமைந்துள்ளது. தமிழக அரசிடம் இந்த 217 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க புதுச்சேரி அரசு கேட்டு இருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் விமான நிலைய விரிவாகத்திற்கான இடங்கள் குறித்து வருவாய் துறை மூலம் சர்வே நடந்தது. இந்த பணி முடிந்துள்ள சூழ்நிலையில் புதுச்சேரி விமான நிலைய ஆலோசனை குழு வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நேற்று கூடியது. இதில் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இரு மாநிலங்களிலும் சர்வே நடந்துள்ளது. ஆனால் எந்தந்த இடங்கள் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளன. யாரிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை என்கிறனர். விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள இடம் குறித்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். இந்த பட்டியல் விமான நிலைய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று வெளியிடப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வளவு தேவை புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு 800 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இந்த நிதியை முதலில் டெபாசிட் செய்தால் மட்டுமே விமான நிலைய திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த முடியும். இந்த முழு பணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் மத்திய அரசு, புதுச்சேரி அரசின் சொந்த நிதியில் இருந்து பார்த்து கொள்ள சொல்லிவிட்டது. நிதி நெருக்கடியில் இருக்கும் புதுச்சேரி அரசுக்கு இவ்வளவு தொகை டெபாசிட் செய்து இடத்தை கையகப்படுத்த வாய்ப்பே இல்லை. எனவே தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி செலுத்தும் முதலீட்டு மானிய கடனில் கீழ் இந்த 800 கோடியை எதிர்பார்த்து மத்திய அரசின் கதவை புதுச்சேரி அரசு தட்டி காத்திருக்கின்றது.

