ADDED : மே 24, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நகை அடகு வைப்பதில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, கதிர் காமம் பகுதியில் இயங்கிய வட்டிக் கடைக்கு உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் சீல் வைத்தார்.
புதுச்சேரி, வழுதாவூர் சாலை, கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் ஒரு வட்டிக் கடையில் நகை அடமானம் வைப்பதில் முறைகேடு நடப்பதாக கலெக்டர் தயானந்த் டெண்டுல்கருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் தலைமை யிலான ஊழியர்கள் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வட்டிக் கடையில் இருந்த லெட்ஜர் மற்றும் வட்டி புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத் தனர்.
இதனால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் தன்வந்தரி நகர் போலீசார் ஈடுப்பட்டனர்.
