ADDED : பிப் 22, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் இன்று தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:45 மணிக்கு கூடுகிறது. நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், வரும் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.