தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச வேதியியல் கருத்தரங்கம்

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச வேதியியல் கருத்தரங்கம்

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச வேதியியல் கருத்தரங்கம்


ADDED : பிப் 11, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில், 'வேதியியல் அறிவியலில் உருவெடுத்து வரும் புதிய போக்குகள்' என்ற சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, பேசுகையில், பல்துறை இணைந்த ஆராய்ச்சியின் உலகளாவிய அவசியத்தையும், இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் வேதியியலாளர்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.

கருத்தரங்கின் தலைவர் பக்ததாஸ் வரவேற்றார். கல்வி இயக்குநர் தரணிக்கரசு மற்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியின் பீடாதிபதி பேராசிரியர் சிப்நாத் தேவ் ஆகியோர், நிலைத்த வளர்ச்சி, மேம்பட்ட பொருட்கள் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிகளில் வேதியியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் இந்திய தேசிய அறிவியல் அகாடமி விஞ்ஞானி பசவையா சிறப்புரையாற்றினார். அவர், பல்வேறு துறைகளில் பணியாற்றும் வேதியியலாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்புகளை விளக்கி, நேர்மை மற்றும் கடின உழைப்பு தொழில்முறை முன்னேற்றத்தின் அடிப்படை குறித்து வலியுறுத்தினார்.

கருத்தரங்கில், ஆய்வு சுருக்க நுால் துணை வேந்தர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப அமர்வுகளில் பேராசிரியர் பசவையா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழக பேராசிரியர் கேரி ஹேனன், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பாம்பேயின் பேராசிரியர் நம்பூதிரி, கனடாவின் குவெபெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிஹைலா சிபியன், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன புலுகுரி ஆகியோர் முழுமையான சொற்பொழி வழங்கினர்.

இதில், இயற்கை பொருட்கள், ஊக்கவியல், ஒருங்கிணைப்பு வேதியியல் மற்றும் சிக்கலான மூலக்கூறு தொகுப்பு போன்ற பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றன. இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை முன்வைக்கும் வகையில் ஒரு போஸ்டர் அமர்வும் நடத்தப்பட்டது.

நிறைவு விழாவில், சிறந்த போஸ்டர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் கலாசார நிகழ்ச்சியும் நடந்தது. கருத்தரங்கின் செயலாளர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us