தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு தொடக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு தொடக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு தொடக்கம்


ADDED : செப் 24, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறைகள் மூலம் நோய் முன்னேற்றத்தைக் கணிப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என, துணைவேந்தர் பிரகாஷ்பாபு பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பள்ளி சார்பில் ஒருங்கிணைந்த நரம்பியல் வேதியியல் நியூரோ இன்பர்மேடிக்ஸ் மற்றும் சிகிச்சை முறைகள் என்ற தலைப்பில் 40வது சர்வதேச நரம்பியல் வேதியியல் சங்கத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது.

டீன் பேராசிரியர் ஜோசப் செல்வின் வரவேற்றார். பேராசிரியர் தினகர ராவ் நோக்கவுரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசியதாவது:

நவீன நரம்பியல் ஆராய்ச்சி மூலம் பெருமளவிலான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அத்தரவை அறிவாகவும், அறிவை புரிதலாகவும், அந்தப் புரிதலை பயனுள்ள சிகிச்சை முறைகளாகவும் மாற்றுவதே தற்போதைய முக்கிய சவாலாகும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறைகள் மூலம் மூளை இமேஜிங் மற்றும் நோய் முன்னேற்றத்தைக் கணிப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரத்த மூளைத் தடை காரணமாக மத்திய நரம்பு மண்டலத்திற்கு சிகிச்சை மருந்துகளைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிரமங்கள் உள்ளன. இதற்காகப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

சர்வதேச நரம்பியல் வேதியியல் சங்க தலைவர் அமிதாபா சட்டோபாத்யாய், கவுரவத் தலைவர் தாக்கூர், செயலர் பேராசிரியர் சுஹேல் பர்வேஸ், அமைப்புச் செயலாளர் ரஞ்சித் குமாவத் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் மாநாட்டு புத்தகம் மற்றும் செய்திமடல் வெளியிடப்பட்டது.

26ம் தேதி வரை நடக்கும் இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இளம் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 90க்கும் மேற்பட்ட  விளக்கக்காட்சிகள், சிறப்பு விரிவுரைகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகளும் இதில் இடம்பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us