ADDED : செப் 24, 2026 08:52 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில், பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய மூன்று ரவுடிகளை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் மதியம் இடையஞ்சாவடி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தனர். அப்பகுதியில் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் பெத்துசெட்டிப்பேட்டை ஜூங்கா, 24, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அசோக் நகர் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பார்க் அருகில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வில்லியனுார் கோகுல்,29; குறிஞ்சி நகர் அன்னை இந்திரா வீதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய லாஸ்பேட்டை லோகேஷ்,21; ஆகியோரையும் லாஸ்பேட்டை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். ரவுடிகளான இவர்கள் மூன்று பேர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
