ADDED : மே 17, 2025 12:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் துல்லிய மருத்துவத்திற்கான மரபணு குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.
புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவ கல்லுாரி நோயியல் மற்றும் மருத்துவ உயிரி தொழில்நுட்பத் துறை,விநாயகா மிஷன் ரிசர்ஜ் பவுண்டேஷன் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில், துல்லிய மருத்துவத்திற்கான மரபணு மற்றும் நோயியல் பாலம் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.
டாக்டர் ஜெயசாம்பவி வரேவேற்றார்.விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர்நிலை பல்கலைக் கழக மேலாண்மை வாரிய உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கி பேசுகையில், பல்கலைக்கழக வேந்தர் கணேசன்,துணை தலைவர் அனுராதாகணேசன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்த சர்வதேச கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்படும் துல்லிய மருத்துவத்திற்கான மரபணு நோயியல் பாலம் குறித்த கருத்துகள் மருத்துவ ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்' என, குறிப்பிட்டார்.
துவக்க விழாவில், அமெரிக்க டெக்ஸாஸ் பல்கலைக் கழக ஜெனோமிக்ஸ் சோதனை மேம்பாட்டு ஆய்வக இயக்குநர் ராஜ்யலட்சுமி லுாத்ரா, டாக்டர்கள் சுவாமிநாதன் பத்மநாபன், அவ்தேஷ்கலியா, ரஷ்மி கனகல் ஷாமன்னா, சாரதி மல்லம்பதி, வினோத் ஸ்காரியா துளசிராமன் ஆகியோர் நவீன சிகிச்சைகள் குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் டீன் ராகேஷ் சேகல், ஆராய்ச்சி இயக்குநர் சர்மான் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் தாமோதரன், பல்வேறு துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.