/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி
/
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி
ADDED : செப் 21, 2024 06:31 AM

புதுச்சேரி: துத்திப்பட்டு, சீகெம் மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் சர்வதேச இளைஞர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது.
இப்போட்டிகள் வரும் 23 மற்றும் 26ம், தேதி நடக்க உள்ளது. இதற்கான வலை பயிற்சியில் இரு அணி வீரர்களும், கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்றும் பயிற்சி மேற்கொண்டனர்.
சர்வதேச போட்டிக்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் ஆடிய பல வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.