ADDED : செப் 20, 2025 07:01 AM

பாகூர் : பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் இயன்முறை மருத்துவக் கல்லுாரியில் உலக இயன்முறை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் இயன்முறை மருத்துவக் கல்லுாரியில், உலக இயன் முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி முதல் ஒரு வார காலம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
உலக இயன்முறை மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி, 'ஆரோக்கியமான முதுமை' எனும் இவ்வாண்டின் தலைப்பை மையமாகக் கொண்டு மருத்துவ முகாம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொடர் உடலியல் கல்வி நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன.
விழாவின் நிறைவு நாளில், கடலுார் டவுன்ஹாலில் இருந்து சில்வர் பீச் வரை 3.5 கி.மீ துாரத்திற்கு, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் சண்முகநாந்த், துறைத் தலைவர் டாக்டர் செந்தில் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.உடலியல் சிகிச்சையின் சமூக நலன் மற்றும் ஆரோக்கியத்தில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.