/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
/
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : பிப் 12, 2026 04:25 AM

புதுச்சேரி: சர்வதே அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்ற புதுச்சேரி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சர்வதேச அளவிலான கிக் பாக்சிங்போட்டி, டில்லி ஜவர்ஹாலல் நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் 22 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் கிஷோர், கபிலாஷ், விசுவநாதன், சஞ்சய் ராஜ் ஆகிய நான்கு பேர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்களுடன் புதுச்சேரி அணியின் மேலாளராக சீனியர்பயிற்சியாளர் மோகன், அணி பயிற்சியாளர் ராகுல் ஆகியோர் சென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கானபாராட்டு விழா, புதுச்சேரி ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அகில இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே வளவன், புதுச்சேரி மாநில கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன், புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்க தலைமை நிர்வாக அதிகாரி முத்து கேசவலு, இணைச்செயலாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் மதிஒளி, சேர்மன் ஆளவந்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினர்.

