/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகே பல் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மாகே பல் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாகே பல் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாகே பல் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 20, 2025 01:36 AM
புதுச்சேரி :மாகே பல் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட மாகேயில் இயங்கி வரும் மாகே பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, மலேசியாவில் உள்ள ஆசிய மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடையேயான சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், மாகே பல் மருத்துவக் கல்லுாரியின் சேர்மன் ரமேஷ்குமார், முதல்வர் அனில்மேலத், மலேசியா பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன், தலைமை இயக்க அதிகாரி கிரண்ரெட்டி, பல் மருத்துவத்துறை டீன் ரமேஷ் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்வி நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச மாநாடுகள் நடத்துவது ஆகிய கல்விசார் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றனர்.