ADDED : மார் 17, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், உலக மகளிர் தின விழா முதலியார்பேட்டை கலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
இயக்க செயலாளர் கலைவாணி கணேசன், இணைச் செயலாளர் வெற்றிவேலன், வேலுநாச்சியார் படத்திற்கு மலர் துாவி விழாவை துவக்கி வைத்தனர்.
நிறுவன தலைவர் கலைவரதன் சிறப்புரையாற்றினார். சமூக சேவகி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, முனைவர் லலிதாம்பிகை, என்.ஆர். இலக்கியப் பேரவைத் தலைவர் தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாவலர் கலைவாணி சதீசு தலைமையில் பெண்மையை போற்றுவோம் என்னும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் கவிதை வாசித்தனர். தொடர்ந்து மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கவிஞர் அமர்ஜோதி நன்றி கூறினார்.