/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்
/
சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்
சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்
சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்
ADDED : பிப் 12, 2025 05:09 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான நேர்காணல் நாளை நடக்கிறது.
இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜிப்மரில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், சவக்கிடங்கு உதவியாளர், குடல்வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு ஆகிய சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. படிப்பு காலத்தில் மாதம் ரூ.300ம், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3 ஆயிரத்து 713 வழங்கப்படும். விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி மாலை 4.30 மணி வரை பெறப்பட்டு, இதற்கான நேர்காணல் நாளை 13ம் தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ஜிப்மர் கல்வி மையம், கல்விப்பிரிவு மூன்றாம் தள வளாகத்தில் நடக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.