sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் காங்., துடைத்தெறியப்படும் :பா.ஜ., பொதுச்செயலாளர் மோகன்குமார் பேட்டி

/

 புதுச்சேரியில் காங்., துடைத்தெறியப்படும் :பா.ஜ., பொதுச்செயலாளர் மோகன்குமார் பேட்டி

 புதுச்சேரியில் காங்., துடைத்தெறியப்படும் :பா.ஜ., பொதுச்செயலாளர் மோகன்குமார் பேட்டி

 புதுச்சேரியில் காங்., துடைத்தெறியப்படும் :பா.ஜ., பொதுச்செயலாளர் மோகன்குமார் பேட்டி


ADDED : பிப் 23, 2026 04:17 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 2026ல் காங், முழுமையாக துடைத்தெறியப்படும் என, பா.ஜ., பொதுச்செயலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.

அவர், கூறியதாவது; டில்லியில் நடந்த ஏ.ஐ., மாநாட்டில், 68 நாடுகள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஒருமனதாகத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதனை உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சுமார் ரூ. 23.5 கோடி மதிப்பிலான மிகப்பெரிய ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை பிரதமர் உருவாக்கியிருக்கிறார்.​ஆனால், ஜனநாயக விரோத காங்., கட்சியைச் சேர்ந்த ராகுலின் துாண்டுதலின் பேரில், ஏ.ஐ., மாநாட்டில் இந்தியாவிற்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செய்த செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

தேசத்திற்கு காங்., தொடர்ந்து அவமானத்தைத் தந்து கொண்டிருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். தேசத்தின் பெருமையைச் சீர்குலைக்கும் கட்சி தேவையா என, மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

​புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள். புதுச்சேரி மக்களும் மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தைப் பார்க்கிறார்கள்.

புதுச்சேரியில் ஏற்கனவே காங்., துடைத்து எறியப்பட்டுவிட்டது. மிச்சம் மீதி இருப்பதும் இந்த 2026 தேர்தலில் முழுமையாகத் துடைத்தெறியப்படும்.

​ஒவ்வொரு ஓட்டும் தே.ஜ., கூட்டணிக்குத் தான்; காங்., கட்சிக்கு ஒரு ஓட்டு கூட விழாது. சாமானிய மக்கள், காங்., கட்சியினர் மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நாட்டின் பெருமையைச் சீர்குலைப்பதாக உள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us