/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேட்டி
/
சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேட்டி
சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேட்டி
சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேட்டி
ADDED : அக் 16, 2025 02:21 AM

புதுச்சேரி: மல்லாடி அமைச்சராக இருந்தபோது, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.
ஏனாம் பிராந்திய காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்., தலைவர் வைத்திலிங்கம் பேசுகையில், காங்., ஆட்சியில்தான் ஏனாம் வளர்ச்சி பெற்றது. மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சராக இருந்தபோது, வெள்ளத் தடுப்பு சுவர் மற்றும் ரிலையன்ஸ் பைப் லைன் அமைப்பது உள்ளிட்ட அனைத்திலும் கமிஷன் பார்த்தார். அவர் ஏனாமிற்கு வே ண்டாம் என்றார்.
அதற்கு பதில் அளித்த மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு நான் தயார். நீங்கள் கடிதம் அனுப்ப முடியுமா? கமிஷன் வாங்கியது நீங்களா? நானா என்பதை பொது வெளியில் விவாதிக்கலாமா? மதுபான தொழிற்சாலைகளில் மாதந்தோறும் கமிஷன் வாங்கியது யார் என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். எம்.பி.,யாக நீங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வந்த திட்டத்தை கூற முடியுமா என சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரியில் மல்லாடி கிருஷ்ணராவ் அமைச்சராக இருந்த போது மக்களுக்கு உழைத்ததை விட கார்ப்ரேட்டுகளுக்கு தான் அதிகம் உழைத்தார். அவரது அறையில் மதுபான உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் தான் இருப்பர். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்.
ரிலையன்ஸ் கொடுத்த பணம், ஆயில் நிறுவனம் தந்த சி.எஸ்.ஆர்., பணத்துக்கு மல்லாடி கிருஷ்ணராவ் கணக்கே தரவில்லை. அதன் மீதான விசாரணைக்கு தயாரா என, தெரிவிக்க வேண்டும். மல்லாடி மற்றும் வைத்திலிங்கம் சொத்துக் கணக்கை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை தெரியவரும். இலங்கை அமைச்சர்களை மல்லாடி சந்தித்தது பற்றி விளக்கம் தர வேண்டும்.
மல்லாடியால் தான் முதல்வர் ரங்கசாமி ஏனாமில் தோல்வி அடைந்தார். ஏனாமில் மல்லாடியை மக்கள் புறம் தள்ளி விட்டனர்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அரசு பதவியை வைத்து கொண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வின் மாண்பை குலைத்து, அவரை செயல்படவிடாமல் தடுத்து வருகிறார்.
நாங்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு தயார். வரும் தேர்தலில் ஏனாமில் இண்டியாக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவர்' என்றார்.