/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., உழைத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லை பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் பேட்டி
/
காங்., உழைத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லை பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் பேட்டி
காங்., உழைத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லை பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் பேட்டி
காங்., உழைத்தவர்கள் முன்னுக்கு வந்ததில்லை பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் பேட்டி
ADDED : ஜூலை 03, 2025 12:56 AM

புதுச்சேரி : வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராமலிங்கம் நேற்று முறைப்படி கட்சி அலுவலகத்தில் பொறப்பேற்றார். அவரை, தலைவர் நாற்காலியில் அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் அமர வைத்தனர். தொடர்ந்து அவர், அலுவலக கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று, தனது பணியை துவங்கினார்.
பின், அவர், கூறியதாவது:
பா.ஜ., மாநில தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது பா.ஜ.,வில் மட்டுமே சாத்தியம். பிற கட்சிகளில் 30 ஆண்டாக இருந்தாலும் விடமாட்டார்கள். காங்., கட்சியில் ஓரிரு தலைவர்கள் தான் திரும்ப, திரும்ப வருவார்கள். சாமானியர்கள் வர முடியாது.
சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த என்னை, மாநில தலைவராக பிரதமர் ஆக்கியுள்ளார். இது பா.ஜ.,வில் உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பா.ஜ., கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்துள்ளார். ஆனால், காங்., கட்சியில் உழைத்தவர்கள் எவரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.
நியமன எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்து கட்சிக்கு உழைத்தோருக்கு வாய்ப்பு தந்துள்ளோம். சாமானியர்களை தேடி பத்மஸ்ரீ விருது தருகிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரியில் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நேர்மையான முறையில் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளோம். தரமான அரிசி தருகிறோம். 30 ஆயிரம் பேருக்கு பென்சன் தந்துள்ளோம். பென்சன் தொகையை உயர்த்தியுள்ளோம். முதல்வரும், நாங்களும் பசி அறிந்தவர்கள். எங்களை விட யாரும் செய்ய முடியாது.
காங்., கட்சியில் முதல்வர், தலைவர் எம்.பி., பதவிகளில் சிலரே இருப்பார்கள். வரும் 2026 சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதனால் தான் சாமானியனை தலைவராக்கியுள்ளார். பிரதமர் சாதனையையும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.