/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'இண்டி' கூட்டணிக்கு யார் தலைமை வி.சி., திருமாவளவன் பேட்டி

ADDED : பிப் 09, 2026 04:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனிடம், தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கூட்டணிக்கு தி.மு.க., தலைமை ஏற்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தி.மு.க., காங்., இடதுசாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி தான் புதுச்சேரியிலும் உள்ளது. புதுச்சேரியில் தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கூடிய குழுவை தி.மு.க. தான் கடந்த காலத்தில் அமைத்தது. இப்போதும் தி.மு.க., நியமித்த அந்த குழு தான் வி.சி., மற்றும் ஒரு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி கொண்டு இருக்கின்றது. அந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் அனைத்தையும் முடிவு செய்வோம். புதுச்சேரியில் யார் தலைமை வகிக்கின்றார்கள் என்பது சூழ்நிலை பொறுத்து முடிவு செய்வார்கள்.
ஆனால் இது எதுவாக இருந்தாலும் இது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். அதில் நாங்கள் இணைக்கமான முடிவினை மேற்கொள்வோம் என்றார்.