/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல்
/
இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல்
ADDED : அக் 08, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் வேதபுரிநத்தம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன், 60; இந்திய கம்யூ., பாகூர் தொகுதி கமிட்டி உறுப்பினர். இவர், கடந்த 2ம் தேதி பாகூர் மேற்கு வீதியில் உள்ள டீ கடை அருகே நின்றிருந்தார்.
அங்கு வந்த பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்த பீஷ்மன் 40; தாமோதனிடம், நண்பர் மணிவண்ணன் எங்கே என கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தாமோதரன் அளித்த புகாரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

