/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை
/
விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை
ADDED : நவ 12, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாகனம் மோதி காயமடைந்த முதியவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மறைமலை அடிகள் சாலை யில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 6ம் தேதி, அந்தோணியர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற டாடா ஏஸ் வாகனம் (பி.ஒ.01, டி.இ. 0574) அவர் மீது மோதியது.
படு காயமடைந்த முதியவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவனையில் சேர்த்தனர். விபத்து குறித்து பெரியக்கடை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, கிச்சை பெற்று வருபவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரித்து வருகின்றனர்.

