/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி மா.கம்யூ., கண்டனம்
/
ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி மா.கம்யூ., கண்டனம்
ADDED : நவ 12, 2025 06:47 AM
புதுச்சேரி: பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அவர்களை தேர்தல் பணிக்கு அனுப்பியதற்கு மா.கம்யூ., கண்டனம் தெரிவித்துள்ளது.
மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், கவர்னர் மற்றும் தலைமைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதம்;
பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும்போது, பெரும்பாலான ஆசிரியர்களை எஸ்.ஐ.ஆர்., தேர்தல் பணிக்காக பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க, ஆசிரியர்களை உடனடியாக பள்ளி பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும். பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் சென்டாக் உட்பட பல பொறுப்புகளை ஒரே இயக்குநர் வகிப்பதால், அவரது கடமைகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
எனவே, பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ் மொழி அறிந்த நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும். மற்ற துறைகளுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
கல்வி சாராப் பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

