/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி குண்டு வெடிப்பு எதிரொலி போலீசார் வாகன சோதனை
/
டில்லி குண்டு வெடிப்பு எதிரொலி போலீசார் வாகன சோதனை
டில்லி குண்டு வெடிப்பு எதிரொலி போலீசார் வாகன சோதனை
டில்லி குண்டு வெடிப்பு எதிரொலி போலீசார் வாகன சோதனை
ADDED : நவ 12, 2025 06:47 AM

திருபுவனை: டில்லியில கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக மதகடிப்பட்டு எல்லையில் எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டில்லி கார் குண்டு வெடிப்பு நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதனையொட்டி, புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான மதகடிப்பட்டில் புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி வர்மன், ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளில் வெளிமாநில நபர்கள் தங்கி இருந்தால் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, விடுதி மேலாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

