/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என விசாரணை
/
புதுச்சேரியில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என விசாரணை
புதுச்சேரியில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என விசாரணை
புதுச்சேரியில் வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என விசாரணை
ADDED : ஜன 20, 2025 06:00 AM

புதுச்சேரி, : புதுச்சேரி சாலையில் நேற்று காலை வெடித்து சிதறியது நாட்டு வெடிகுண்டா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கோவிந்தசாலை, வாஞ்சிநாதன் வீதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, நேற்று காலை 5:00 மணி அளவில் திடீரென அதிக சத்தத்துடன் கூடிய மர்ம பொருள் வெடித்து சிதறியது. அதிக சத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது, அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால், மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது.
தகவலறிந்த பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் வெடித்து சிதறியது நாட்டு வெடிக்குண்டா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், மர்ம நபர்கள் யாரேனும் நாட்டு வெடிகுண்டை அவ்வழியாக எடுத்து சென்றபோது கீழே விழுந்து வெடித்ததா அல்லது அப்பகுதி மக்களை மிரட்டுவதற்காக வெடிக்க வைக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள ஜவுளிகடை நிறுவனத்தின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெடி விபத்து நடந்த இடத்தை தொகுதி எம்.எல்.ஏ., நேரு, தி.மு.க., பொறுப்பாளர் கோபால் ஆகியோர் பார்வையிட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.