
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் சுருங்கி கிடக்கும் சாலைகளில் வாகனங்கள் செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த போலீஸ் அதிகாரிகள் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் வரிசையாக சாலையில் கார்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
ஏற்கனவே சுருங்கியுள்ள காந்தி வீதி, போலீசாரின் வாகனங்களால் மேலும் சுருங்கி மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள், போலீசாரே இப்படி செய்யலாமா, இது நியாயமா என கேள்வி கேட்டு நொந்து கொண்டனர்.

