/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் அங்கக பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கல்
/
வேளாண் அங்கக பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கல்
ADDED : பிப் 17, 2024 05:22 AM
புதுச்சேரி : காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், அங்கக வேளாண்மை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் வெளிட்டுள்ள செய்திகுறிபபு;
விவசாய மற்றும் கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு, அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு, புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி இளைஞர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி 6 நாட்கள் நடக்கும். அதில், அங்கக வேளாண் தொழில்நுட்பங்கள், கம்போஸ்ட் தயாரிக்கும் முறை, அங்கக உரங்கள், மண்புழு உரம் தயாரித்தல், கழிவுகளை கொண்டு உரம் தயாரித்தல், பஞ்சகாவ்யம், அமிர்த்த கரைசல், மீன் அமிலம், முட்டை ரசம் மற்றும் பூச்சு விரட்டி தயாரித்தல், பூச்சு மற்றும் நோய் மேலாண்மை செய்முறை பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு, புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவசாய கூலி அல்லது விவசாய குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சியில் பங்கேற்பவர்கள், ஆதார் அட்டை நகலுடன், அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். விண்ணப்பித்தினை வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு சம்ர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 9489052303, 0413 - 2271292, 2279758 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.