/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்
/
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜன 31, 2025 07:41 AM

திருக்கனுார்; சோரப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திருபுவனை தொகுதி சோரப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதனால், அருகிலிருந்த கொம்யூன் பஞ்சாயத்து கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.
புதிய கிராம நிர்வாக அலுவலகம் பணி முடிவடைந்தது. நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, கிராம நிர்வாக அதிகாரி பக்கிரி பூரணசந்திரன், புதிய அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, விசாரணை நடத்தி, வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணியினை துவங்கினார்.

