/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிற்சி முடித்த மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
/
பயிற்சி முடித்த மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 07, 2024 06:24 AM

புதுச்சேரி: மீன்பிடி படகு இயந்திர பழுது நீக்கல் பயிற்சி முகாமில் பங்கேற்ற மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையத்தின் சார்பில் பிரதம மந்திரியின் மத்திய சம்பதா யோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாகம் கடந்த 3ம் தேதி தேங்காய்திட்டு துறைமுகத்தில் துவங்கியது.
இம்முகாமில் மீன்பிடி படகு இயந்திரம் பழுது நீக்கல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய மீன் வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிலைய வல்லுநர் மணிமாறன் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. பயிற்சி முடித்த மீனவர்களுக்கு இணை இயக்குனர் தெய்வசிகாமணி சான்றிதழ் வழங்கினார்.
ஏற்பாடுகளை மீன்வளத் துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

