/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டை வழங்கல்
/
காங்., உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டை வழங்கல்
ADDED : மே 24, 2025 03:25 AM

புதுச்சேரி:புதுச்சேரி அமைப்புசார தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்., சார்பில் உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அம்பலத்தடையார் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்., நிர்வாகி சக்தி சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டை வழங்கப்பட்டது.
காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.