/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல்படை வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
/
ஊர்காவல்படை வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : செப் 25, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஊர்காவல்படை வீரர் மற்றும் கான்ஸ்டபிள் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி போலீஸ் துறையில் சமீபத்தில், ஊர்காவல்படை வீரர் தேர்வு நடந்தது.
இதில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் விடுப்பட்ட 29 நபர்களுக்கு ஊர்காவல்படை வீரர் பணி ஆணையும், கோர்ட் உத்தரவின்படி முன்னாள் ராணுவ வீரர்கள் 6 பேருக்கு, கான்ஸ்டபிள் பணி ஆணையை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் நேரு, லட்சுமிகாந்தன், சிவா, டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி., கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.