/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
ADDED : மே 31, 2025 11:40 PM

அரியாங்குப்பம்: வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. இரண்டாவது தவணையாக 3 பயனாளிகளுக்கு தலா 1.60 வீதம் 4.80 லட்சம் நிதிக்கானஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
தொடர்ந்து, மூன்றாவது தவணையாக 45 பயனாளிகளுக்கு தலா 70 ஆயிரம் வீதம் 31.50 லட்சம் ரூபாய், மேலும், ஒரு நபருக்கு 1.20 லட்சம், 2 நபர்களுக்கு தலா 1 .90 லட்சம் வீதம் 3.80 லட்சத்திற்கான நிதி ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன், மெல்கி தாஸ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.