/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூலை 19, 2025 03:42 AM

புதுச்சேரி : திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியை ஸ்டெல்லா நாயகி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லோட்டஸ் பவுண்டேஷன் இயக்குனர் சமயவேலு கலந்து கொண்டு, மாணவர்களை வாழ்த்ததி பேசி, கட்டுரை, பேச்சு, ஓவியம், வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். ஆசிரியை யமுனா தேவி தொகுப்புரையாற்றினார். ஆசிரியை புனிதவதி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியை பாக்கியலட்சுமி, பிரேமலதா, இசை ஆசிரியர் வெங்கடேசன், கணினி ஆசிரியை நித்யா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.