/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : பிப் 21, 2024 09:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : உப்பளம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், உப்பளம் தொகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் நிதி உதவி பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அலுவலகம் வர இயலாத நிலையில் உள்ள பயனாளிகளுக்கு அவர்களின் வீடு தேடி சென்று அடையாள அட்டையை வழங்கினர். நிகழ்வின் போது, தி.மு.க., நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, ராகேஷ், பாலாஜி, ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

