/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் தொகுதியில் ரேஷன் கார்டு வழங்கல்
/
உப்பளம் தொகுதியில் ரேஷன் கார்டு வழங்கல்
ADDED : ஜன 02, 2026 04:54 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதி மக்களுக்கு ரேஷன் கார்டுகளைஅனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு பெற்றுத் தருவதற்கு தொகுதி எம்.எல்.ஏ., மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகள் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகள் பெறப்பட்டு ரேஷன் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம், இருதயராஜ், ராகேஷ்,கிருஷ்ணா, ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.

