/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்
ADDED : பிப் 05, 2025 05:54 AM
நெட்டப்பாக்கம்,: கருணாலயம் கிராம நலச்சங்கம் மற்றும் பெங்களூர் எனேபிள் இந்தியா சுய வேலைவாய்ப்பு கிராம தொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கருணாலயம் நலச்சங்கம் அலுவலகத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு கிராமநல சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி சுய வேலைவாய்ப்பு கிராம தொழில் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ஜோஸ்பின் சகாயராணி கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சுய வேலைவாய்ப்பு கிராம தொழில் பயிற்சி நிறுவன பயிற்சியாளர் வீரபத்திரன் கருத்துரை வழங்கினார். வேல்விழி நன்றி கூறினார்.